நாடே நடுங்கிய ’பலாத்கார கொலை’ அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த மம்தா - பிரதமர் எடுக்க போகும் முடிவு?

Update: 2024-08-23 08:38 GMT

நாடே நடுங்கிய ’பலாத்கார கொலை’ அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த மம்தா - பிரதமர் எடுக்க போகும் முடிவு?

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றக் கோரி பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்

கொல்கத்தா மருத்துவமனையில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடையே உலுக்கியிருக்கிறது. வழக்கை கையாண்ட விதத்தில் மம்தா அரசு விமர்சிக்கப்படும் வேளையில் பிரதமர் மோடிக்கு, அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடு முழுவதும் தினசரி கிட்டத்தட்ட 90 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தரவுகள் காட்டுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர் கொல்லப்படுகிறார், இந்த போக்கு அச்சமளிக்கிறது, இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமை எனக் கூறியிருக்கும் மம்தா, இதன் வாயிலாகவே பெண்கள் பாதுகாப்பை உணர்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனையை வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கும் மம்தா, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்