வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் அடாவடி செய்வதாக புகார்.. வணிக நிறுவனத்தினர் வேதனை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் வாகனத்தில் ஜப்தி வாகனம் என்னும் சிறு அறிவிப்பு பதாகையுடன் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தின் வாசலில் இடையூறாக நிறுத்தி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சீட்டையும் வணிக நிறுவனத்திடம் கொடுத்ததாக தெரிய வருகிறது. தங்களுக்கு இடையூறாக கழிவுநீர் வாகனத்தை நிறுத்துவதாக வணிக நிறுவனத்தினர் வேதனை தெரிவித்த நிலையில், வரித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.