தாறுமாறாக ஓடி டீக்கடையை சிதைத்த ஆம்புலன்ஸ்..உள்ளே பார்த்த போலீசுக்கு காத்திருந்த ஷாக்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் சென்றபோது, தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஆம்புலன்ஸ் வருவதைக் கண்ட கடையிலிருந்த நபர்கள் தப்பிச்சென்றதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆம்புலன்ஸின் முன்பகுதியில் மதுபாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிவக்குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.