நெஞ்சில் பச்சை குத்து.. கையில் மாவுக்கட்டு - பாவப்பட்டு போட்டுவிட்ட போலீஸ்
சென்னை கோட்டூர்புரத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஆறு பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் படப்பை சுரேஷ் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக ரவுடி சுக்குகாப்பி சுரேஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேருக்கு ஏற்கனவே மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக ஜெபஸ்டின், விக்னேஷ் ஆகியோருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.