குவாரிக்குள் திகில் கிளப்பிய அகோரிக்கே உயிர் பயம் காட்டிய மக்கள்

Update: 2025-03-20 04:13 GMT

சிதம்பரம் அருகே சவுடு மணல் குவாரி மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த குவாரியின் உரிமையாளர், அகோரியை வைத்து மாந்திரீகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரி தாலுக்காவிற்கு உட்பட்ட, கொத்தட்டை, அத்தியாநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சவுடு மணல் எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினார். இதனை அடுத்து மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர், அகோரியை வைத்து மாந்திரீகம் செய்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் மாந்திரீகம் செய்தவரை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்