சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த10ம்தேதி தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறை நடத்திய விசாரணையில், தாகிர் இஸ்லாம் என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் தாகிரும் அவரது நண்பரும் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தாகிரின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.