சென்னை திநகரில் வீட்டில் எரிந்த நிலையில் இறந்த நபர் ஒருவர் அழுகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இறந்தவர் பீகாரைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்திருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. ராஜீவ் குமார் துணிக்கடைக்கு வேலைக்கு வராத நிலையில், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது அறைக்கு சென்று பார்த்த நண்பர் ஹரிஷ் அளித்த தகவலின் பெயரில் ராஜீவ் குமாரின் சடலமானது மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.