ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்.. மாலை அணிவித்து, காரில் ஏற்றி அழகு பார்த்த பேரூராட்சி தலைவர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் 30 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த முனியாண்டி என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், முனியாண்டிக்கு கூட்ட அரங்கில் வைத்து மாலை அணிவித்து கௌரவித்த பேரூராட்சி தலைவர், தொடர்ந்து தனது காரில் முனியாண்டியை அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.