துப்புரவு தொழிலாளர்களை கன்னத்தில் அறைந்த நாகர்கோவில் மேயர் - வைரலாகும் ஆடியோ

Update: 2024-07-21 15:01 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட நீராளிகுளம் பகுதியில் பாலமுருகன், இசக்கி, சரத் ஆகிய 3 துப்புரவு பணியாளர்கள் வேலைபார்த்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த மேயர் மகேஷ், குப்பைகளை அங்கே கொட்டுவதாக எண்ணி கண்டித்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியநிலையில், தொழிலாளர்களின் கண்ணத்தில் மேயர் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேயர் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர் ஒருவர் பேசும் ஆடியோ வைரலானது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட 3 துப்புரவு தொழிலாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர் உதயகுமார் ஆணையருக்கு மனு அளித்துள்ளார். மேலும், உதயகுமாரின் புகாரின்பேரில் மேயர் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளதால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்