நடு ரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - நூலிழையில் தப்பிய உரிமையாளர்

Update: 2025-03-24 04:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திப்பனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது உறவினரின் இறப்பு நிகழ்வுக்காக காரில் போச்சம்பள்ளிக்கு வந்து பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு சென்றார். அப்போது சந்தூர் சாலையில் சென்ற காரில் திடீரென தீ பற்றியது. இதனையடுத்து காரில் இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்