கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் ராக்கிங் அல்ல, முதலாம் ஆண்டு மாணவர் தங்கியிருந்த அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு சீனியர் மாணவர் தாக்கப்பட்டுள்ளார் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர் ஆகியோரை அவர்களுடைய பெற்றோர் முன்னிலையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.