"இனிமே அவங்க தான் முடிவெடுக்கணும்"..அண்ணாமலை சொன்ன அதிமுக்கிய தகவல்

Update: 2023-10-06 02:02 GMT

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்த அண்ணாமலை, கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து தனது கருத்தை பாஜக தேசிய தலைமையிடம் அழுத்தமாக கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து, பாஜக தேசிய தலைமையே முடிவெடுக்கும் என்றும், எந்த முடிவாக இருந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மாவட்ட பொறுப்பார்கள், அடுத்த 7 மாதங்களுக்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்