"தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சீரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-28 11:06 GMT
'மான் கி பாத்' நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நீர் பாதுகாப்பு அவசியம் குறித்து வலியுறுத்தினார். சொந்த நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமான மேகாலயா மற்றும் மிக குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவித்த அரியானா மாநிலங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கி விட்டதால், இதற்காக, நடைபெறும் விழாக்களில் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பல  பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய-மாநில அரசுகள் செய்யும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார். சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியதன் மூலம், பின்னடைவில் இருந்து மீண்டு, வெற்றி பெறும் சக்தி நமக்கு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்