"மிகவும் வருத்தமடைந்தேன்" - மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Manmohan Singh

Update: 2024-12-27 02:06 GMT
  • "மிகவும் வருத்தமடைந்தேன்" - மன்மோகன் சிங் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Manmohan Singh | CM Stalin
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேரறிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டி, வழிகாட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
  • மன்மோகன் சிங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றதாக பதிவிட்டுள்ள முதலமைச்சர்,
  • பிரதமராக நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மன்மோகன் சிங் முக்கிய பங்களித்ததாக நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,
  • தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில் எதிரொலிப்பதை உறுதி செய்ததாக சுட்டிக்காட்டினார்.
  • மன்மோகன் சிங்கை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,
  • மன்மோகன் சிங்கின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்