பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறிய SSI - அதிரடி காட்டிய எஸ்.பி | Rajapalaiyam | TN Police | ThanthiTV

Update: 2024-12-27 02:16 GMT

பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறிய SSI - அதிரடி காட்டிய எஸ்.பி | Rajapalaiyam | SP | TN Police | ThanthiTV

பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் மோகன்ராஜ் என்பவர், மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்துள்ளார். காவல் நிலையத்தின் மாடிக்கு சென்ற மோகன்ராஜ் அங்கு இருந்த பெண் போலீஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ் கூச்சல் போட்ட பின், கீழே இருந்த சக போலீஸார் மாடிக்கு சென்று அவரை மீட்டனர். இதையடுத்து மோகன்ராஜ் மீது பெண் போலீஸ் புகார் அளித்தார். மருத்துவ பரிசோதனையில் மோகன்ராஜ், மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மோகன்ராஜை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், உத்தரவிட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்