மன்மோகன் சிங் மறைவு - பிரதமர் மோடி இரங்கல் | Manmohan Singh | PM Modi | Thanthi TV
புகழ்பெற்ற தலைவரை இழந்ததற்காக ஒட்டுமொத்த இந்தியாவே வருந்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் பதிவில், ஏழ்மையான பின்னணியில் இருந்து அனைவராலும் மதிக்கக்கூடிய பொருளாதார நிபுணராக முன்னேறியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
நிதியமைச்சர் உட்பட பல்வேறு உயர்பதவிகளை வகித்து, நாட்டின் பொருளாதார கொள்கையில் பல ஆண்டுகளாக முத்திரை பதித்தவர் எனவும்,
பிரதமரான பிறகு பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் போற்றியுள்ளார்.
மன்மோகன் சிங்கை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி,
அவரது மறைவால் ஒட்டுமொத்த தேசமே வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அரசு நிர்வாகம் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.