காதலித்து ஏமாற்றிய பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயற்சி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
காதலித்து ஏமாற்றிய பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயற்சி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai | TNPolice
காதலித்து ஏமாற்றிய பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயன்ற விவகாரத்தில், முன்னாள் காதலன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஐடி பெண் ஊழியர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் பெண் ஐடி ஊழியர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அம்பத்தூரை சேர்ந்த பரத் என்பவரை காதலித்து வந்துள்ளார். பரத் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதால் அவருக்கு சுமார் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது நகைகளையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டு, நம்ப வைத்து தன்னுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவித்துள்ளார். இதே போன்று திவ்யா என்ற மற்றொரு பெண்ணிடமும் பழகியதாகவும் தன்னோடு சேர்த்து திவ்யாவிடம் தகாத முறையில் ஒரே நேரத்தில் உறவு வைக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். பரத்தின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்ததால் அவரது சமூக வலைதள பக்கத்தை ஆய்வு செய்தபோது, பல சிறுமிகள் பெண்கள் பணக்கார பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை காட்டி ஏமாற்ற முயன்றதாக கூறியுள்ளார். இதனிடையே,தன் மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பரத், தனது சகோதரனுடன் இணைந்து, கடந்த 25-ம் ஆம் தேதி கோயம்பேட்டில், கார் ஏற்றி கொல்ல முயன்றதாக சிசிடிவி காட்சியோடு புகார் அளித்துள்ளார். இதையடுத்து முன்னாள் காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.