"என் வழிகாட்டியை இழந்துவிட்டேன்" -மன்மோகன் சிங்கிற்கு ராகுல் இரங்கல் | Manmohan Singh | Rahul Gandhi

Update: 2024-12-27 02:04 GMT

தனது ஆலோசகரையும், வழிகாட்டியையும் இழந்து தவிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கள் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தியதாக போற்றியுள்ளார். அவரது பணிவும், பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதலும் தேசத்தை ஊக்கமளித்ததாக போற்றியுள்ள ராகுல் காந்தி, மன்மோகன் சிங் மனைவி கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகனை போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவுகூர்வர் என பதிவிட்டுள்ளார். இதேபோல மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்