ஊருக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த சிறுத்தை - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ | Leopard | UP
ஊருக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த சிறுத்தை - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ | Leopard | UP
சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையின் நடுவே சுதந்திரமாக சுற்றி திரிந்தது. இந்த சிறுத்தையானது, ஷியோபூரை தளமாகக் கொண்ட குனோ தேசிய பூங்காவில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. பூங்காவில் இருந்து தப்பிய அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது