போன் பே, கூகுள் பே போன்ற யு.பி.ஐ செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய்வரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை யு.பி.ஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. பெரும்பாலான இதர வகை பணப் பரிவர்த்னைகளுக்கான உச்ச வரம்பு, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயாக தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை, காப்பீடு, வெளிநாட்டில் இருந்து பணம் பெறுதல் போன்ற சில பிரிவுகளுக்கு மட்டும் இந்த உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாயாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது....