துருக்கியில், இஸ்தான்புல் மேயர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்கின்றன. 2028 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு Ekrem Imamoglu அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மக்கள் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முடியாமல், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
எதிர்க்கட்சித்தலைவர் ஒஸ்குர் ஒஸல் Ozgur Ozel தலைமையில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.