காட்டுத்தீயில் கருகிய பழமையான புத்த கோயில்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
தென்கொரியாவில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள உய்சோங் பகுதியில் உள்ள பழமையான புத்த கோயில்கள் பலவும் தீக்கிரையாகியுள்ளன. இன்னொரு புறம் புத்த கோயிலில் பரவிய தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து அணைக்கும் பணி நடைபெற்றது.