அந்தமானில் குலுங்கிய பூமி தட்டு.. அருணாச்சலப் பிரதேசம் வரை பரவிய அதிர்வு
ஆசிய கண்டத்தின் இரண்டு வெவ்வேறு பிராந்தியங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்திலும், அந்தமான் கடல் பகுதியிலும் உணரப்பட்டது. திபெத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 5 என்ற அளவிலும், அந்தமான் கடல் பகுதியில் 4 புள்ளி 9 என்ற அளவிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சலப் பிரதேச எல்லையிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.