வெயிலுக்கு குளுகுளுன்னு தர்பூசணி சாப்டுறீங்களா? - திடுக் வீடியோ

Update: 2025-03-21 03:38 GMT

ஒசூர் அருகே பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தரமின்றி விற்பனை செய்யப்பட்ட 8 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது, தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்