சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் மலைத்தேனீ கொட்டியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வசித்த ராஜா முஹமது, தனது வீட்டில் இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது தேன் கூடு கலைந்து பறந்த தேனீக்கள்,,, ராஜா முகமது, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரை கொட்டியுள்ளது. இதில் காயம் அடைந்த ராஜா முகமது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேர் தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.