குஜராத்தில் இருந்து போட்ட ரூட்.. சிக்கிய திண்டுக்கல்காரர்.. இப்படியா ஏமாறுவாங்க?

Update: 2025-03-22 04:04 GMT

திண்டுக்கல்லைச் சேர்ந்த நபரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். நாகல்நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரனிடம் ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக் கூறி இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் சென்று, கிஷோர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்