``மருதமலை முருகன் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு'' - இந்து சமய அறநிலையத்துறை
கோவை மருதமலை முருகன் கோயிலில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் குட முழுக்கின் போது, தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி, உப்பிலிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் பாபு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதுபோன்ற நடைமுறைகளையே பின்பற்றி வருவதாக அறநிலையத்துறை தெரிவித்தது.