``தக்காளியே இல்ல.. இது தக்காளி சாதமா?'' -ஆட்சியர் உமாவின் கேள்வியால் ஒருநொடி ஆடிப்போன ஊழியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டையில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார். அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று மழலைகளுடன் ஜாலியாக பேசிய ஆட்சியர் உமா, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, தக்காளியே இல்லையே... இது தக்காளி சாதமா என சிரித்துக்கொண்டே ஆட்சியர் கேட்ட நிலையில், தக்காளியுடன் கலந்த பருப்பு சாதம் என பணியாளர் பதில் அளித்தார்.