"அக்கவுண்டே இல்லாமல்.. 1 லட்சம்.." - மாயமில்ல மந்திரமில்ல.. நடந்த சம்பவம்

Update: 2025-03-22 03:38 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் கடன் பெறாதவர்களுக்கு கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உஷா 98 ஆயிரத்து 634 ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகையன் 33 ஆயிரத்து 990 ரூபாய் கடன் பெற்றதாகவும், பணத்தை உடனடியாக வங்கிக்கு செலுத்த வேண்டும் என கூட்டுறவு வங்கியில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. இதேபோல், கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு கூட நோட்டீஸ் அனுப்ப‌ப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்