நெல்லை மாவட்டம் பணகுடியில் கடைகளில் இருந்த காலாவதியான உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணகுடியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காலாவதியான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். பிளாஸ்டிக் கவர்களையும் கைப்பற்றி அபராதம் விதித்த அதிகாரிகள், உரிமையாளர்களை எச்சரித்தனர்.