எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் வைத்த கோரிக்கை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்

Update: 2025-03-20 13:23 GMT

எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் வைத்த கோரிக்கை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், குலசேகரப்பட்டினம் அடுத்த வெள்ளமடம் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சாத்தியக்கூறு இருப்பின் சிப்காட் ஆலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ ஊர்வசி அமித்ரராஜ், சாத்தான்குளம் பகுதியில் 11,000 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ள நிலையில், அதனை பதப்படுத்த ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்