திருச்செந்தூர் கோயில் அருகே நடந்த பெரும் விபத்து - அதிகாலையில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-29 14:35 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருகே சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 4 மணியளவில், கோயில் அருகே பெருந்திட்ட வளாக பணிகளுக்கு தளவாட பொருட்களை இறக்கி விட்டு திரும்பிய லாரி, சாலையோர மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்து விழுந்த நிலையில், பக்தர்கள் அப்போது இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்