அம்பத்தூர் கொலைக்கு பழிக்கு பழியா... வீட்டு வாசல் வரை தேடிவந்த கொலை வெறி - பதற்றைத்தில் சென்னை பகுதி
அம்பத்தூர் கொலைக்கு பழிக்கு பழியா... வீட்டு வாசல் வரை தேடிவந்த கொலை வெறி - பதற்றைத்தில் சென்னை பகுதி
வில்லிவாக்கம் பாரதி நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், அம்பத்தூரில் நடந்த கொலைக்கு பழி வாங்கும் செயலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாரதி நகர் முதல் தெருவில் வில்சன் என்பவரது வீட்டில் பெட்டோல் குண்டு வீசப்பட்டதில், கேட் பகுதி பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்களை தீயை அணைத்த வேளையில், வில்லிவாக்கம் போலீசார் பெட்ரோல் நிரப்பி வீசப்பட்ட பெட்ரோல் கேனை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். போலீஸ் விசாரணையில் இதே வீட்டில் வசித்த அலெக்ஸ் என்பவரை 2022 ஆம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்தனர். அந்த கொலையாளிகளில் ஒருவனான நவீன் என்கிற லொட்ட நவீனை நேற்று அம்பத்தூரில் மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.