ஆண்டின் முதல்நாள் என்பதால் மன்னித்து விட்ட சென்னை போலீஸ்... மீண்டும் இதை பண்ணாதீங்க பிரண்ட்ஸ்
ஆண்டின் முதல்நாள் என்பதால் மன்னித்து விட்ட சென்னை போலீஸ்... மீண்டும் இதை பண்ணாதீங்க பிரண்ட்ஸ்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 242 இருசக்கர வாகனங்கள், பறிமுதல் செய்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மாநகரில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 425 இடங்களில் வாகன தணிக்கை மையங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உயர் ரக வாகனங்களில் அதிக சத்தம், அதிவேக சாகசம் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விதிமீறல்களில் ஈடுபட்ட 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில்,
ஆவணங்கள் முறையாக இருந்த நிலையில்,
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களிடம், வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆண்டின் முதல் நாள் என்பதால், காவல்துறையினர், சிறு சிறு விதி மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.