ஊரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணின் பையில் வைத்திருந்த 65 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த
செல்வி என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்
உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தன் குழந்தையுடன்
சென்றுள்ளார். இன்று அதிகாலை செல்வி அரசு விரைவு
பேருந்தில் போளூரில் இருந்து கோயம்பேடு பேருந்து
நிலையத்திற்கு வந்து இறங்கி பின்பு அங்கிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார் .வீட்டிற்கு வந்த பார்த்தபோது 65 சவரன் நகை வைத்திருந்த பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர் ஆட்டோவில் நகை பையை தவறவிட்டாரா அல்லது பேருந்தில் வரும் போது மறந்து வைத்து விட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.