தேனி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த பொன் விஜய் என்வருக்கு வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் அடைந்த, அவரது மனைவி இலக்கியா தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.
- இந்த நிலையில், வீட்டில் தூங்கி கொண்டு இருந்த பொன் விஜய் மீது இலக்கியா பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
- அதில் படுகாயம் அடைந்த பொன் விஜய் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இந்த நிலையில் பொன் விஜயின் தாயார் கண்ணம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இலக்கியாவை கைது செய்துள்ளனர்.
- பொன் விஜய் மதுரை மேயர் இந்திராணியின் கணவரான பொன் வசந்த்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.