ஆங்கில புத்தாண்டு..தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு தரிசனம்-பொங்கி வழிந்த பக்தர்கள் கூட்டம்

Update: 2025-01-01 12:46 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில்

முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக 13-ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில்

ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் பயபக்தியுடன் பூ மிதி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் கோழி,ஆடுகளை பலியிட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்று பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கோவை மருதமலை முருகன் கோயிலில் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் கோயிலுக்குள் செல்ல முடியாத மக்கள் , வாசலிலேயே நின்று கற்பூரம் மற்றும் தேங்காய் உடைத்து வெளியில் நின்று வணங்கி விட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்