புத்தாண்டு தொடங்கிய சில நிமிடத்தில்.. இளைஞர் உயிரை பறித்த வாகனம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-01-01 12:33 GMT

புத்தாண்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.எம்.ஆர் சாலை, நாவலூர் பகுதியில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இளைஞர் தலை நசுங்கி பலியானார். உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்தும், அவரை இடித்து விட்டு சென்ற வாகனம் குறித்தும் தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்