சென்னை ECR-ல் சந்தேகத்தில் பிடித்த 3 பேர் - விசாரணையில் போலீஸுக்கு காத்திருந்த ஷாக்

Update: 2025-01-01 13:08 GMT

சென்னை ECR-ல் சந்தேகத்தில் பிடித்த 3 பேர் - விசாரணையில் போலீஸுக்கு காத்திருந்த ஷாக்

சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் மெத்தபெட்டமைன் போதைபொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த பகுதியில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக சென்னை நீலாங்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்படை போலீசார் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் அருகே கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற சிலரது உடமைகளை சோதித்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதை வைத்திருந்த

முகமது இலியாஸ், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த,

முகமது அசாருதீன், சல்மான் பாரீஸ், ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6.6 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் மூவராம் ரூபாய் பணம், ஒரு செல்போன், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்