தாய் இறந்ததால் மனநல பாதிப்பு - ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

x

தாய் இறந்ததால் மனநல பாதிப்பு - ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

சென்னையில் மின்சார ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட பெண் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கவிதா என தெரியவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மடியிலேயே தாய் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சியில், மனரீதியாக பாதிக்கப்பட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்