ஆதார், ரேஷன், ஓட்டர் ஐடியை நடுரோட்டில் தூக்கி வீசி ஆவேச ஆர்ப்பாட்டம்

Update: 2025-03-21 03:30 GMT

நெல்லையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு பட்டா வழங்காத‌தை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டக்கார‌ர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்