கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எஸ்டிபிஐ நிர்வாகி ரகுமானை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணைக்காக அவரை டெல்லி அழைத்து சென்றனர். கைதான ரகுமான் மீது பெட்ரோல் குண்டு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மேட்டுப்பாளையத்தில் உள்ள ரகுமானின் வீடு, கடைகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.