"அருவா, கத்தி தயார் பண்ணா போலீஸ் தொந்தரவு பண்றாங்க" - கேட்டதும் உத்தரவு போட்ட கோர்ட்

Update: 2025-03-21 03:48 GMT

பட்டறைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை தயாரிக்க கூடாது என்று பொதுவாக உத்தரவிடக்கூடாது என மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த சப்பானி என்ற சேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டறை தொழிலாளர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டறையில் எதை தயாரிக்கலாம், எதை தயாரிக்க கூடாது

என விவரமான பட்டியலை தாக்கல் செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்