காணாமல் போன நாய் - உரிமையாளரை பார்த்ததும் 5 கி.மீ துள்ளி குதித்து ஓடி வந்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2025-03-21 03:29 GMT

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில் காணாமல் போன நாய், தன்னை வளர்ப்பவரை கண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்தது. முரளி என்பவர் வளர்த்து வந்த நாய், 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதை அடுத்து, பல இடங்களில் தேடி அதிகத்தூர் என்ற இடத்தில் நாயை கண்டுபிடித்தார். அவரைக் கண்டு ஓடி வந்து சுற்றி சுற்றி வந்த நாய், அவருடைய வாகனத்தில் ஏறாமல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை, இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து ஓடி வந்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்