வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினை காரணமாக காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா மாற்றுவதற்கு பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் தீக்குளிக்க முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story