பொன்னேரியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் நிர்வாகியை கடிந்துக்கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பகுதியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு
பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.அப்போது
அமருவதற்காக கட்சி நிர்வாகியிடம் நாற்காலி எடுத்து வர
கேட்ட போது, அவர் வேறு ஒருவரிடம் கூறியதால், கோபமடைந்த அமைச்சர் நாசர், நிர்வாகியை திட்டி அவரை முதுகில் தட்டினார்.