போனில் மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் அண்ணன் - உடனே போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை அகறும் ஒப்பந்தத்தை கேட்டு மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவியின் அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இரும்பு ஆயுதங்களை கொண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிற்சாலையில் பணிபுரியும் கார்த்திக் பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள எழுச்சூர் ஊராட்சி மன்றத் தலைவி ஸ்ரீவித்யாவின் கணவர் ரஞ்சித் குமாரை தேடி வருகின்றனர்.