திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் - விண்ணை பிளந்த `கோவிந்தா' கோஷம்

Update: 2025-03-24 02:24 GMT

சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தோரோட்டத்தில் திரளான பக்தர்கள் ஒன்று கூடி வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் உற்சவர் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்