புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே, பலா மரத்தில் ஏறி பலாப்பழம் வெட்டிக்கொண்டிருந்த போது, உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.