தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 686 ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷ முறிவு மருந்துகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் - விடை நேரத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாய்க்கடி, பாம்புக்கடிக்கு போதுமான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.